தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 26, 2026 05:12 PM

ADDED : நவ 26, 2026 05:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 05:12 PM ADDED : நவ 26, 2026 05:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம், பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைளை அரசு நிறைவேற்றித்தர வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெனிட்டாமேரி, பொருளாளர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். இதில் பெண் ஊழியர்கள் பொது சுகாதாரப் பகுதி, சமுதாய செவிலியர், துணை செவிலியர்களாக பணிபுரிகின்றனர். இதனிடையே ஒப்பந்த செவிலியர்களாக இடைநிலை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கிராம செவிலியர்களும் தேவையற்ற சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. எனவே ஒப்பந்த செவிலியர் நியமனத்தை கைவிட வேண்டும். சி.ஹச்.ஓ., பதவிப்பெயர் மாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஏராளமான செவிலியர்கள் பங்கேற்றனர்.––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us