/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டாவது நாளாக இரவு பகலாக தொடரும் செவிலியர்கள் போராட்டம் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
/
இரண்டாவது நாளாக இரவு பகலாக தொடரும் செவிலியர்கள் போராட்டம் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
இரண்டாவது நாளாக இரவு பகலாக தொடரும் செவிலியர்கள் போராட்டம் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
இரண்டாவது நாளாக இரவு பகலாக தொடரும் செவிலியர்கள் போராட்டம் மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
ADDED : டிச 21, 2025 06:47 AM

ராமநாதபுரம்: - ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் இரண்டாம் நாளாக இரவு பகலாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மருத்துவமனையில் நோயாளிகள் அவதியடைகின்றனர்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் டிச.,18 ல் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் விட்டனர்.
அவர்கள் பஸ்ஸ்டாண்டில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் நேற்று முன்தினம் முதல் மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிப்பது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, கொரோனா காலத்தில் பணி செய்த அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். செவிலியர்கள் போராட்டத்தால் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் போதிய நர்சுகள் இல்லை.
இதனால் நோயாளிகள் முறையான சிகிச்சை பெற முடியாமல் அவதியடைகின்றனர். நேற்று காலை மருத்துவமனைக்கு ரத்த காயத்துடன் வந்த நோயாளி ஒருவருக்கு முதலுதவி கூட அளிக்கப்படாமல் நீண்ட நேரம் காத்திருந்தார்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் தற்போது செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயிற்சி டாக்டர்கள், செவிலியர் மாணவிகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.

