UPDATED : அக் 11, 2026 05:56 PM
ADDED : அக் 11, 2026 05:54 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட நலச் சங்கம் சார்பில் தேசிய நலவாழ்வு குழுமம், பொது சுகாதாரம், ஊரக சுகாதாரம் உள்ளிட்ட மருத்துவமனைகளில் காலியாக உள்ள 112 செவிலியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்கான செப்.25 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் https://ramanathapuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. –––
