/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 05:40 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்டத்தலைவர் சகாயதமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு காலமுறை ஊதியம் பெறுகின்ற வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவதை போன்று அகவிலைப்படியுடன் கூடிய மாதாந்திர ஓய்வூதியம் ரூ.6750 மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யும் முறையை கைவிட வேண்டும். அரசுத் துறையில் காலி பணியிடங்களில் பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளித்து காலமுறை ஊதியத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஏராளமான சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.