தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2026 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 05:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தம் செய்து கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சங்க மாவட்டத் தலைவர் சகாய தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கணேசன், மாநில துணைத் தலைவர் தனலெட்சுமி, ஓய்வு பெற்றவர்கள் சங்கத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குறுதிபடி வருவாய் கிராம உதவியாளருக்கு ஓய்வூதியமாக ரூ.6750 வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு போல பணிக்கொடை மற்றும் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பதவி உயர்வு வழங்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

மேலும் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சங்கத்தின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us