தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாலை நேரத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க நோன்பு கஞ்சி

 மாலை நேரத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க நோன்பு கஞ்சி

 மாலை நேரத்தில் வழங்கப்படும் ஊட்டச்சத்து மிக்க நோன்பு கஞ்சி


ADDED : பிப் 25, 2026 08:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 08:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழக்கரை: ரம்ஜான் மாதம் துவங்கியதை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு நோற்பதை கடமையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நோன்பு கஞ்சி விநியோகம் மாலை நேரத்தில் துவங்கியுள்ளது.

புனித ரம்ஜான் மாதத்தில் இறை கட்டளையை ஏற்று முஸ்லிம் மக்கள் நோன்பை கடைப்பிடித்து வருகின்றனர். ரம்ஜான் நோன்பு மனதை கட்டுப்படுத்தும் கடிவாளமாகவும், சுய கட்டுப்பாட்டையும் ஒருங்கிணைக்கச் செய்கிறது. அதிகாலையில் இருந்து மாலை வரை நோன்பை கடைபிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தியும், தெம்பையும் அளிக்கும் விதமாக நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.

அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பி சாப்பிடக்கூடிய நோன்பு கஞ்சி இப்தார் எனப்படும் மத நல்லிணக்க நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

நோன்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி, டால்டா, நெய், பச்சை மிளகாய், சிறு பருப்பு, வெந்தயம், வெங்காயம், கேரட், தக்காளி, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா, காய்கறிகளை கொண்டு நோன்பு கஞ்சி தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளி வாசல்களிலும் பெரிய அளவிலான அண்டாக்களில் விறகுகளைக் கொண்டு நேர்த்தியாக சமைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிராமங்களிலும் முஸ்லிம்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாத் மூலமாக வழங்குகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் மூலம் குலுக்கல் முறையில் நன்கொடையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாலை நேரத்தில் துாக்கு சட்டி, வாளி உள்ளிட்ட பாத்திரங்களில் நோன்பு கஞ்சி பரவலாக விநியோகம் செய்யப்படுகிறது. மாலை நேரத்தில் நோன்பு திறந்த பிறகு நோன்பு கஞ்சி, வடை, தர்பூசணி, கடல்பாசியில் தயாரித்த உணவுகள், சர்பத் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவு பதார்த்தங்களை சாப்பிடுகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us