/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் மறியல்
/
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் மறியல்
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் மறியல்
ராமநாதபுரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் வியாபாரிகள் மறியல்
ADDED : பிப் 21, 2025 06:58 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சின்னக்கடை ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றிய போது காய்கறி கடைகள், மீன் கடைகளில் பொருட்களை பறிமுதல் செய்ததால் நகராட்சி அலுவலர்களை கண்டித்து வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் ரோட்டோரம் ஏராளமானோர் மீன், காய்கறி வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகளை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர்.
அப்போது காய்கறிகள், மீன்களை பறிமுதல் செய்து குப்பை வண்டியில் ஏற்றினர். இதனை கண்டித்து வாகனத்தை முற்றுகையிட்டு வியாபாரிகள் சின்னகடை வீதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரிகளுடன் தாசில்தார் சுவாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் வியாபாரம் செய்ய வேண்டும். பறிமுதல் செய்த பொருட்கள் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
எஸ்.டி.பி.ஐ., கண்டனம்
சின்னகடை வீதியில் காய்கறி, மீன்களை குப்பைத்தொட்டியில் போட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். சிறுபான்மை வியாபாரிகள், மக்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படுகின்றனர். இதை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ரியாஸ்கான் தெரிவித்துள்ளார்.

