/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடமாக மாறும் கடலாடி பஸ் ஸ்டாண்ட் கவனியுங்க ஆபிசர்

ADDED : ஜூன் 20, 2025 11:43 PM
கடலாடி: கடலாடி பஸ்ஸ்டாண்ட் சேதமடைந்த நிலையில் அக்கட்டடம் இடித்து அகற்றப்பட்டு 2021ல் ரூ.10 லட்சத்தில் இரும்பு சீட் கூரை வேயப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் பஸ் ஸ்டாண்டில் உள்ளே மழை நீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது.
பல இடங்களில் தளம் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் முருகன் கூறியதாவது: கடலாடி பஸ் ஸ்டாண்ட் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடமாக மாறி வருகிறது.
தேவர் சிலையில் இருந்து எம்.ஜி.ஆர்., சிலை வழியாக செல்லக்கூடிய சாலை சேதமடைந்துள்ளது. ஒருவானேந்தல் முதல் இளஞ்செம்பூர் வரை நெடுங்குளம் வழியாக செல்லும் இரண்டரை கி.மீ.,  சாலை சேதமடைந்துள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
எனவே கடலாடி யூனியன் அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.