/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்படும் சமத்துவபுர நிலத்தை சூழ்ந்த வெள்ள நீர் நடவடிக்கை எடுங்க ஆபீஸர்

ADDED : நவ 25, 2024 06:37 AM

திருப்புல்லாணி : -திருப்புல்லாணி யூனியனுக்குட்பட்ட குதக்கோட்டை ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் சமத்துவபுரம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும்.
குதக்கோட்டையில் ரூ.6 கோடி 80 லட்சத்தில் 100 வீடுகள் கொண்ட கட்டமைப்பு வசதிகளுடன் கடந்த ஜூன் மாதம் சமத்துவபுரம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டது.
5 ஏக்கரில் வீடுகள் கட்டும் பணி ஆரம்ப நிலையில் உள்ளது.
பெரும்பாலான வீடுகளுக்கு தற்பொழுது அஸ்திவாரம் மற்றும் தரைத்தளம் அமைக்கும் பணியில் உள்ள நிலையில் தொடர் மழையால் அப்பகுதி முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது.
அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: அரசு சட்டக் கல்லுாரிக்கு அருகே உள்ள சமத்துவபுரத்திற்கு பின்பகுதியில் கைக்கிளார் ஓடை மற்றும் வரத்து கால்வாய் செல்கிறது.
இங்கிருந்து செல்லக்கூடிய வரத்து கால்வாய் 2 கி.மீ.,ல் உள்ளது. சிற்றோடையின் வழித்தடம் முழுவதும் துார்ந்து போய் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. சிற்றோடையாக சென்ற கைக்கிளார் ஓடை தற்பொழுது எவ்வித பராமரிப்பு இன்றி உள்ளது.
இந்த ஓடையை துார்வாரும் நடவடிக்கை மேற்கொண்டால் சமத்துவபுரத்தில் தேங்கிய உபரி நீர் ஓடையின் வழியாக வழிந்து ஓடும். எனவே விவசாய நிலங்களின் நன்மை கருதி கைக்கிளார் ஓடையை துார்வார வேண்டும் என்றனர்.