/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையில் பெயரளவில் சோலார் விளக்கு; பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது
/
சாலையில் பெயரளவில் சோலார் விளக்கு; பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது
சாலையில் பெயரளவில் சோலார் விளக்கு; பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது
சாலையில் பெயரளவில் சோலார் விளக்கு; பராமரிப்பின்றி சேதமடைந்து வருகிறது
UPDATED : ஆக 07, 2025 08:48 AM
ADDED : ஆக 07, 2025 07:24 AM

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதிஜெகநாதகோயில், உத்திரகோசமங்கை மங்களநாதர் சிவன்கோயில், ஏர்வாடி தர்ஹா உள்ளிட்ட புனித ஆன்மிக ஸ்தலங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் வசதிக்காக ராமநாதபுரம்- -மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு கிழக்கு கடற்கரை சாலைகள் நான்கு வழி சாலையாக உள்ளது.
ராமநாதபுரம்--துாத்துக்குடி சாலை, கீழக்கரை, திருப்புல்லாணி, உத்திரகோசமங்கை ரோடுகள் குறுகியதாகவும் இவ்விடங்கள் சந்திப்புகள், கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் இடங்கள் கரும்புள்ளி என மேம்படுத்த வேண்டிய பகுதியாக கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக ராமநாதபுரம்- மதுரை ரோடு, சேதுக்கரை பிரிவு, துாத்துக்குடி ரோடு ஆர்.எஸ்.மடை சந்திப்பு ஆகிய விபத்து அதிகம் நடைபெறும் பகுதிகளில் கரும்புள்ளி மேம்படுத்தல் சாலை பாதுகாப்பு நிதியில் சோலார் சிஸ்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிவப்பு சிக்னல் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த விளக்குகள் தொடர் பராமரிப்பின்றி சில இடங்களில் பழுதாகியும், சேதமடைந்தும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர், உள்ளாட்சி நிர்வாகத்தினர் பழுதான சோலார் சிக்னல் விளக்குகளை மாற்றியும், தொடர்ந்து பராமரிக்க முன்வர வேண்டும்,அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.