/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வேதாளையில் வீட்டிற்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் மீட்டரில் குறையில்லை என அதிகாரி விளக்கம்
/
வேதாளையில் வீட்டிற்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் மீட்டரில் குறையில்லை என அதிகாரி விளக்கம்
வேதாளையில் வீட்டிற்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் மீட்டரில் குறையில்லை என அதிகாரி விளக்கம்
வேதாளையில் வீட்டிற்கு ரூ.67 ஆயிரம் மின் கட்டணம் மீட்டரில் குறையில்லை என அதிகாரி விளக்கம்
ADDED : ஜூலை 23, 2025 03:00 AM

ராமநாதபுரம்:மண்டபம் அருகே வேதாளையில் சுனாமி குடியிருப்பில் உள்ள வீட்டிற்கு ரூ.67ஆயிரம் மின் கட்டணம் செலுத்தும்படி மின் வாரியம் கூறியதை கண்டித்து குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மின் மீட்டரில் குறை இல்லை என மின்வாரிய உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
சுனாமிகுடிருப்பில் வசிக்கும் சேக் ஜமாலுதீன் தன் வீட்டுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.800 முதல் 1000 வரை மின் கட்டணம் செலுத்தி வருகிறார். கடந்த மே மாதம் ரூ.67ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியுற்றார். இதுதொடர்பாக கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் ஜூனில் புகார் அளித்துள்ளார். ஆனால் கட்டணத்தை செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியத்தினர் கூறினர்.
இதையடுத்து மின்வாரியத்தை கண்டித்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சேக்ஜமாலுதீன் குடும்பத்தினருடன் தர்ணாவில் ஈடுபட்டார். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சேக்ஜமாலுதீன் கூறியதாவது: சுனாமி வீட்டில் மேல்தளம் சிமென்ட் கூரையில் வீடு உள்ளது. ஏசி பயன்படுத்துகிறோம். திடீரென மின் கட்டணம் ரூ.67 ஆயிரம் வந்துள்ளது. கட்டவில்லை என்றால் மின்இணைப்பை துண்டித்து விடுவதாக அலுவலர்கள் மிரட்டுகின்றனர் என்றார்.
மின்வாரிய உதவிப்பொறியாளர் நடராஜன் கூறுகையில், ''ரூ.67ஆயிரம் மின் கட்டணம் தொடர்பாக அவரது மின்மீட்டரை ஆய்வு செய்துள்ளோம். அதில் எந்த குறையும் இல்லை. பல மாதங்களாக ரீடிங் குறைவாக கட்டியுள்ளனர். 200 முதல் 300 யூனிட் வரை குறைத்துள்ளனர். இருப்பினும் கணக்கீட்டாளர்கள் இருவரிடம் விசாரணை நடக்கிறது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளோம். தற்போது கூட ரூ.2000 வரை மின்கட்டணம் வந்துள்ளது. கட்டணத்தை குறைத்தும் அவர் ரூ.35,570 செலுத்த புகார்தாரர் மறுக்கிறார். உண்மையான மின்பயன்பாட்டை மறைக்க முயற்சி செய் கிறார்,'' என்றார்.

