/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்சி மொழிச் சட்டம் வார விழா டிச.18- 27 வரை கொண்டாட்டம்
/
ஆட்சி மொழிச் சட்டம் வார விழா டிச.18- 27 வரை கொண்டாட்டம்
ஆட்சி மொழிச் சட்டம் வார விழா டிச.18- 27 வரை கொண்டாட்டம்
ஆட்சி மொழிச் சட்டம் வார விழா டிச.18- 27 வரை கொண்டாட்டம்
ADDED : டிச 14, 2024 06:31 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் வார விழா டிச.18 முதல் 27 வரை கொண்டாடப்படுகிறது.
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இயற்றப்பட்ட 1956 டிச.27ஐ நினைவு கூறும் வகையில் 7 நாட்கள் ஆட்சி மொழி சட்ட வாரவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் டிச.18 - 27 வரை ஒரு வார காலம் நடக்கிறது.
இந்த நாட்களில் அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்களில் ஆட்சி மொழிச்சட்ட வாரத்தை நினைவுகூறும் வகையில் ஒட்டு வில்லைகள் ஒட்டியும் துண்டறிக்கைகள், அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர்ப்பலகை தொடர்பான அரசாணை வழங்கியும் கொண்டாடப்படும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், மாணவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.