UPDATED : நவ 13, 2026 06:34 PM
ADDED : நவ 13, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு அலுவலர்களுக்கான ஆட்சிமொழிப் பயிலரங்கு மற்றும் கருந்தரங்கு நடந்தது.
இதில் அரசு அலுவலகங்களில் அன்றாடப் பணிகளில் தமிழ்மொழியைப் பயன்படுத்துவது, அலுவலகக் குறிப்புகள் மற்றும் வரைவுகள் தயாரிப்பது, ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் குறித்து அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்ச் செம்மொழி விருது பெற்ற விருதாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
