நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்திற்கு உட்பட்ட இ-சேவை மைய பொறுப்பாளர்களுடன் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அமர்நாத் தலைமையில் சான்றிதழ்கள் பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பட்டா மாறுதல், ஜாதி, வருமானம், வாரிசு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கும் போது இ சேவை மையப் பொறுப்பாளர்கள் முறையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பட்டா மாறுதல் விண்ணப்பங்களில் சர்வே நம்பர் உள்ளிட்ட தகவல்களை உறுதிப்படுத்திய பின் பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அதிகாரிகள் மைய பொறுப்பாளர்களிடம் விளக்கினர்.
கூட்டத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் சத்தியேந்திரன், ஆர்.ஐ.,கள் ஆதிலட்சுமி, சாத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.