/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்வாரியம் அலட்சியத்தால் கொக்கிமாட்டி மின் திருட்டு கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : மார் 04, 2024 04:59 AM
கடலாடி: சட்டவிரோதமாக மின்திருட்டில் ஈடுபட்டு அரசு ஒப்பந்த பணி மேற்கொள்ளும் செயல் வீடியோவாக பரவிவருகிறது. மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
கடலாடி அருகே பெரியகுளத்தில் கழிவு நீர் கால்வாய் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் பணிகளை கட்ட டெண்டர் விடப்பட்டு தற்போது பணிகள் நடந்து வருகிறது.
சாலையின் நடுவே உயரழுத்த பிரதான மின் ஒயரில் இருந்து சட்ட விரோதமாக கொக்கி மாட்டி ஒயர் இழுத்து அவற்றிலிருந்து மின்சாரம் பெற்று கம்பி மற்றும் மரங்களை இயந்திரத்தின் உதவியுடன் அறுத்து வேலை செய்கின்றனர். இந்த வீடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது;
வீட்டு மின் இணைப்பு மின்வாரியம் அறிவித்துள்ள குறிப்பிட்ட தேதிக்குள் மின்கட்டணம் செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கின்றனர்.
இது போன்ற சட்டவிரோத மின் திருட்டில் ஈடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்று கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக நடக்கக்கூடிய மின் திருட்டை தடுக்க வேண்டும் என்றனர்.