/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி குழாய் உடைந்து குடிநீர் வீண் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஆக 13, 2025 11:19 PM

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே மு.கடம்பன்குளம்,மேலமானாங்கரை விலக்கு ரோட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவதால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதுகுளத்துார் அருகே மு.கடம்பன்குளம், மேலமானாங்கரை, மரவெட்டி கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
இங்கு ரோட்டோரத்தில் காவிரி குழாய் அமைக்கப்பட்டு அவ்வப்போது குடிநீர் வழங்கப்படுகிறது. மு.கடம்பன்குளம், மேலமானாங்கரை விலக்கு ரோட்டில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணா கிறது.
எந்த பயன்பாடின்றி ரோட்டோரத்தில் தேங்கி நிற்கிறது. இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. காவிரி குடிநீர் குளம் போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து அதி காரிகள் கண்டுகொள்ளாததால் மக்கள் சிரமப்படு கின்றனர்.
எனவே குழாய் உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.