/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருநாழி அருகே கிராமங்களில் 3 ஆண்டுகளாக தொடர் மின்தடை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : டிச 02, 2024 04:35 AM
பெருநாழி : பெருநாழி அருகேயுள்ள 4 கிராமங்களில் 3 ஆண்டுகளாக தொடர் மின்தடை உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது. புகார் தெரிவித்தும் அதிகாரிகள் பாராமுகத்தால் அதனை சரி செய்வதற்கு எவ்வித நடவடிக்கையும் இல்லாத நிலை தொடர்வதாக கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
பெருநாழி அருகே வி.சேதுராஜபுரம், உச்சிநத்தம், அன்னபூவன்நாயக்கன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக அறிவிக்கப்படாத தொடர் மின்தடை இருந்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வி.சேதுராஜபுரம் விவசாயி முத்து வல்லாயுதம் கூறியதாவது: பெருநாழி துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் செய்யக்கூடிய மின்சாரம் முறையாக கிராமங்களுக்கு செல்வதில் தொய்வு ஏற்படுகிறது.
கடந்த பல ஆண்டுகளாக விவசாய நிலங்கள் மற்றும் கிராம சாலைகளின் வழியாக செல்லக்கூடிய மின்கம்பம் சாய்ந்தும் பராமரிப்பின்றும் உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் பொழுது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
இது குறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே பெருநாழி துணை மின்வாரிய அதிகாரிகள் கிராம மக்களின் நலன் கருதி கூடுதல் டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய கம்பங்களை நடுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.