/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.6 லட்சத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் வாறுகால் சேதம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : ஆக 07, 2025 07:04 AM

சாயல்குடி சாயல்குடி அருகே கடுகுச்சந்தை ஊராட்சியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவுநீர் செல்வதற்கான வாறுகால் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது.
கடுகுச்சந்தை ஊராட்சி அலுவலகம் அருகே 250 மீ., நீளத்திற்கு கடுகுச்சந்தை கிராமத்தில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் கால்வாய் திட்டத்திற்காக 15 வது நிதி குழு மானியம் 2023 --2024ல் ரூ. 6 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்தது.
பொதுமக்கள் கூறியதாவது: கடுகுச்சந்தை கிராமத்தில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட வாறுகாலில் முறையாக கழிவு நீர் செல்வதற்கான வழி இன்றளவும் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் கடுகுச்சந்தை ஊராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட வாறுகால் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளது.
இதனால் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக மக்களை சென்றடைவதற்கு முன் யூனியன் அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். எனவே துண்டிக்கப்பட்டு பயன்படாத நிலையில் உள்ள வாறுகாலை மீண்டும் புதுப்பித்து அப்பகுதியில் கழிவுநீர் வெளியேறுவதற்கான வழி செய்ய வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் பயனுள்ளதாக அமையும் என்றனர்.