/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களக்குடியில் மூன்று மாதங்களாக தண்ணீர் வரத்தின்றி காட்சிப்பொருளாகும் பைப்புகள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ADDED : மே 15, 2025 04:07 AM

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட களக்குடியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் பைப்புகளில் தண்ணீர் வரத்தின்றி காட்சி பொருளாக உள்ளது.
மல்லல் ஊராட்சிக்கு உட்பட்ட களக்குடியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள பைப்புகள் மற்றும் வீட்டுக்குரிய குடிநீர் குழாய்களில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் வரத்தின்றி காணப்படுகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
குழாய்களில் தண்ணீர் சப்ளை இல்லாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. குடிநீர் தொட்டிகள் மூலமாக தண்ணீர் சப்ளை இல்லாததால் காற்று மட்டுமே வருகிறது. இதனால் ஒரு குடம் ரூ.12க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வருமானத்தின் ஒரு பகுதி தண்ணீருக்கே செலவிட வேண்டியது உள்ளது.
எனவே மல்லல் ஊராட்சியை நிர்வகிக்கக்கூடிய தனி அலுவலர்கள் களக்குடி கிராமத்தை ஆய்வு செய்து கிராமத்திற்கு தண்ணீர் வசதி கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீருக்காக பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறோம் என்றனர்.