தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளாட்டுக்காக பனை மரங்கள் அழிப்பு ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் பாராமுகம்

 பிளாட்டுக்காக பனை மரங்கள் அழிப்பு ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் பாராமுகம்

 பிளாட்டுக்காக பனை மரங்கள் அழிப்பு ராமேஸ்வரத்தில் அதிகாரிகள் பாராமுகம்


ADDED : செப் 25, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பிளாட் விற்பனைக்காக அரசு அனுமதியின்றி தனியார் சிலர் பனை மரங்களை வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக பராமுகமாக உள்ளனர்.

தமிழக மாநில மரம் பனை மரம். இந்த பனை மரத்தின் வேர் முதல் உச்சி வரை மனிதர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இதனால் பனை மரம் அழிவதை தடுக்க, இந்த மரத்தை வெட்ட தமிழக அரசு தடை விதித்தது. ராமேஸ்வரத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடம் அருகில் ராமேஸ்வரம், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரியாங்குண்டு, மெய்யம்புளி, ஏரகாடு, பர்வதம் வழியாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

இந்த 100 அடி அகல சாலை அமையும் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை பிளாட்டுகள் அமைத்து விற்க ஜரூராக வேலை நடக்கிறது. இதற்காக அரியாங்குண்டு, மெய்யம்புளி உள்ளிட்ட பல பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பனை மரங்களை, மாவட்ட கலெக்டரின் அனுமதியின்றி வெட்டி சாய்த்து அப்புறப்படுத்துகின்றனர்.

மக்களின் வாழ்வாதார மரமாக விளங்கும் பனை மரத்தை அழிப்பதால், ராமேஸ்வரம் பகுதியில் பனை மரங்கள் முற்றிலும் அழியும் அபாயம் உள்ளது. ஆகையால் அனுமதியின்றி பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us