ADDED : ஆக 22, 2026 05:43 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் மகேஸ்வரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேஸ்வரி, உதவியாளர் ஆரோன் முன்னிலை வகித்தனர்.
அப்போது முதுகுளத்துார் பகுதிக்கு உட்பட்ட ஹோட்டல்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தியதில் எந்த குழந்தை தொழிலாளர்களையும் பணியில் ஈடுபடுத்தவில்லை என தெரிய வந்தது.
மேலும் கடை உரிமையாளர்களுக்கு குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் குழந்தை பாதுகாப்பு மையம் வனிதா உட்பட பலர் உடன் இருந்தனர்.
