/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் அலட்சியம்..: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வீணாகும் தண்ணீர்
/
அதிகாரிகள் அலட்சியம்..: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வீணாகும் தண்ணீர்
அதிகாரிகள் அலட்சியம்..: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வீணாகும் தண்ணீர்
அதிகாரிகள் அலட்சியம்..: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வீணாகும் தண்ணீர்
ADDED : ஆக 04, 2025 04:02 AM

ராமநாதபுரம்: மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக வந்துசெல்கின்றனர். இந்நிலையில் அதிகாரிகள் அலட்சியம் காரணமாக தொட்டி நிரம்பி தண்ணீர் வீணாகிறது. தரைத்தளம் சேதமடைந்துள்ளதால் நோயாளிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கடந்த 2023ல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு 5 தளங்கள் கொண்ட பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் ராமநாதபுரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவில் சகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிய கட்டடத்தின் புறநோயாளிகள் பிரிவு உள்ளே செல்லும் நுழைவு வாயில் தரைத்தளம் பெயர்ந்துள்ளது. இதனால் சக்கர நாற்காலியில் வரும் நோயாளிகள், முதியோர் தடுமாறுகின்றனர். நாளுக்கு நாள் அப்பகுதியில் பள்ளம் பெரிதாவதால் விபத்திற்கு முன்பாக சீரமைக்க வேண்டும்.
* வீணாகும் தண்ணீர்:
மருத்துவனைக்கு தேவையான தண்ணீர் தேவைக்கு வளாகத்தில் பிரத்யேக அமைப்பு செயல்படுகிறது. அதிலிருந்து தினமும் மாடியில் உள்ள டேங்கிற்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. அதில் தண்ணீர் நிரம்பி அரை மணி நேரத்திற்கும் மேல் தண்ணீர் வீணாக சென்றது. மருத்துமனையில் முறையான தண்ணீர் மேலாண்மை இல்லாததால் நோயாளிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது. எனவே நீர்மேலாண்மையில் நிர்வாகம் போதிய கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
--