/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி கட்டடங்களில் சிசிடிவி., கேமரா அமைக்கும் அதிகாரிகள்
/
ஊராட்சி கட்டடங்களில் சிசிடிவி., கேமரா அமைக்கும் அதிகாரிகள்
ஊராட்சி கட்டடங்களில் சிசிடிவி., கேமரா அமைக்கும் அதிகாரிகள்
ஊராட்சி கட்டடங்களில் சிசிடிவி., கேமரா அமைக்கும் அதிகாரிகள்
ADDED : அக் 01, 2025 09:01 AM
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
ஆர் .எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சி சேவை மையங்களில் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக சிசிடிவி., கேமரா அமைத்து வரும் யூனியன் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் பொறுப்பேற்ற பின் மக்களுக்கு தேவையான தொலைநோக்கு திட்டங்களையும், அடிப்படை பிரச்னைகளையும் கண்டறிந்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி வருவதால் யூனியன் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆர்.எஸ். மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட 35 ஊராட்சிகளிலும், நடைபெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவின் பேரிலும், உதவி இயக்குனர் பத்மநாபன் ஆலோசனையின் பேரிலும், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி லிங்கம் அனைத்து ஊராட்சி சேவை மைய கட்டடங்களும் சிசிடிவி., கேமரா அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.
கிராமங்களில் ஆங்காங்கே குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள், போலீசாரின் பிடியில் இருந்து எளிதாக தப்பி வந்த நிலையில், யூனியன் அதிகாரிகளின் முயற்சியால் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு வருவதன் விளைவாக திருட்டு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியும் சூழல் ஏற்பட்டுள்ளதுடன், குற்ற சம்பவங்கள் கிராமப் பகுதிகளில் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.