/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் பாராமுகம்: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மதுபாட்டில்கள்
/
அதிகாரிகள் பாராமுகம்: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மதுபாட்டில்கள்
அதிகாரிகள் பாராமுகம்: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மதுபாட்டில்கள்
அதிகாரிகள் பாராமுகம்: மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மதுபாட்டில்கள்
ADDED : ஏப் 11, 2025 04:49 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் சிலர் மது அருந்தி விட்டு பாட்டில்களை கண்டபடி வீசுவதால் மருத்துவமனை சுகாதாரம், பாதுகாப்பு கேள்விகுறியாக உள்ளது. இப்பிரச்னையை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை மக்கள் அச்சம் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மக்களும் சிகிச்சைக்காக வருகின்றனர். கடந்த 2020ல் 2.50 லட்சம் உள், புறநோயாளிகள் வந்துள்ளனர். மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவகல்லுாரியாக தரம் உயர்த்திய பிறகு 2021ம் ஆண்டில் 4 லட்சம் பேர் உள், புறநோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், மருத்துவமனையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை. குறிப்பாக அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு ஏற்றவாறு வடிகால் வசதியின்றி மழை பெய்தால் மருத்துவமனை வளாகத்தில் கழிவுநீர் தேங்குகிறது.
போதிய கண்காணிப்பு இல்லாததால் இரவு நேரத்தில் மருத்துவமனை வளாகத்திற்குள் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை காலி இடங்களில் துாக்கி வீசுகின்றனர். இப்பிரச்னையை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை.
மருத்துவமனையின் பாதுகாப்பு, சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்திற்குள் மது அருந்துபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.