sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

/

ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்

ஊருணியில் மடை சேதம் நீரை சேமிக்க வழியில்லை கண்டுகொள்ளாத அதிகாரிகள்


ADDED : ஜன 04, 2024 01:50 AM

Google News

ADDED : ஜன 04, 2024 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருநாழி; பெருநாழி அருகே பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி மடை சேதமடைந்துள்ளதால் முழுமையாக நீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

பொந்தம்புளி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் ஊருணி அமைந்துள்ளது. 3 ஏக்கரில் வாழவந்தாள்புரம் ஊருணியில் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் உரிய முறையில் தண்ணீர் சேகரிக்க வழியின்றி உள்ளது. வரத்து கால்வாய் அருகே உள்ள மடை சேதமடைந்து இருப்பதால் பொதுமக்கள் பயன்படுத்த வழியின்றி சிரமத்திற்குள்ளாகின்றனர்.

பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: வாழவந்தாள்புரம் ஊருணியில் மடை உடைந்து மூன்று ஆண்டுகளாகிறது. அதனை பழுது நீக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us