/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டம் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டம் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டம் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
சாயல்குடியில் ஜல்ஜீவன் திட்டம் ஒன்றரை ஆண்டாக காத்திருப்பு கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 01, 2024 06:47 AM
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் 1 முதல் 15 வார்டுகள் உள்ளன. 17 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் சார்பில் வீடுகள் தோறும் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. 2022ல் ஜல்ஜீவன் திட்டத்திற்கான பைப் லைன்கள் அமைக்கும் பணி தற்போது வரை ஆமை வேகத்தில் நடக்கிறது.
இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசின் நிதி பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. சாயல்குடி அரண்மனை தெரு நாகேந்திரன் கூறியதாவது:
ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கவும், உறுதி செய்யப்பட்ட குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் வழிவகுக்கிறது.
உள்ளூர் நீர் நிலையை பயன்படுத்தி அவற்றிலிருந்து குடிநீருக்கான ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தற்போது ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இத்திட்டத்தில் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள வீடுகளுக்கு இணைப்பு வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் முறையிடும்போது முடித்து தருகிறோம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனால் இதுவரை எந்த பணியும் நடக்காமல் உள்ளது. எனவே அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். காலதாமதம் செய்வதால் பொதுமக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
பல லட்சங்களுக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் இவற்றை உரிய முறையில் நடைமுறைப் படுத்த வேண்டும். குடம் தண்ணீர் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்துகின்றனர்.
முறையாக வரி கட்டும் பொதுமக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என்றார்.