/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆபத்தான வீட்டில் வசிக்கும் மூதாட்டி
/
ஆபத்தான வீட்டில் வசிக்கும் மூதாட்டி
ADDED : பிப் 13, 2024 04:25 AM

கமுதி : -கமுதி அருகே சிங்கபுலியாம்பட்டியில் சேதமடைந்த ஆபத்தான வீட்டில் மாற்றுத்திறனாளி மூதாட்டி தேவி வசிக்கிறார். வீடு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் இருப்பதால் மூதாட்டி பேரன் முத்துக்குமார் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
சிங்கபுலியாம்பட்டியை சேர்ந்தவர் மூதாட்டி தேவி 70, பிறவி முதல் வாய்பேச முடியாதவர். கணவர் இறந்த நிலையில் தனியாக வசிக்கிறார். கடந்த மாதம் தொடர் கனமழையால் இவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக தேவி உயிர் தப்பினார்.
அதன்பின் சேதமடைந்த வீட்டில் வாழ்கிறார். மாதந்தோறும் கிடைக்கும் முதியோர் உதவித்தொகை ரூ.1000த்தை வைத்து ரேஷன் பொருட்கள் வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார். வீடு எந்த நேரமும் முழுமையாக இடியும் அச்சத்தில் உள்ளார்.
மூதாட்டியின் பேரன் முத்துக்குமார் கூறுகையில், வாய் பேச முடியாத பாட்டி தேவிக்கு மழையால் இருந்த வீடும் இடிந்து போனது.
இருக்கிற வீடும் பாட்டி மேல் விழுந்து விடுமோ என்று அச்சமாக உள்ளது. எனவே முதல்வர் ஸ்டாலின் இடிந்த வீட்டை சீரமைக்க உதவ வேண்டும் என்றார்.