ADDED : நவ 24, 2026 07:00 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அருகே காவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்தன் 85.
இவர் நேற்று முன்தினம் மதியம் அதே கிராமத்தில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கண்மாயில் காளிமுத்தன் உடல் மிதந்தது. கண்மாயில் இறங்கிய போது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி இறந்துள்ளார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.
