ADDED : ஆக 23, 2025 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே புதுப்பட்டினம் கிராமத்தில் குடும்பத்தகராறில் மூதாட்டி முத்தாயி கொலை செய்யப்பட்டார்.
முதுகுளத்துார் அருகே புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி 44, மனைவி பொன்னரசி. இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமமூர்த்தி பொன்னரசியை தாக்கினார்.
அருகில் இருந்த பொன்னரசியின் பெரியம்மா முத்தாயி 82, ஏன் அடிக்கிறாய் என்று தட்டிக்கேட்டார். அப்போது ராமமூர்த்தி கம்பால் முத்தாயி தலையில் தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார். கீழத்துாவல் எஸ்.ஐ., சக்தி மணிகண்டன் வழக்கு பதிந்து ராமமூர்த்தியை கைது செய்தார்.

