/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரிசியில் மண்ணை கொட்டி தொந்தரவு: மூதாட்டி புகார்
/
அரிசியில் மண்ணை கொட்டி தொந்தரவு: மூதாட்டி புகார்
ADDED : மே 20, 2025 12:45 AM
ராமநாதபுரம்: வீட்டை காலி செய்யாததால் ஆத்திரத்தில், சிலர் வீடு புகுந்து அரிசியில் மண்ணை கொட்டி டார்ச்சர் செய்வதாக ராமநாதபுரம் கலெக்டரிடம் மாரியம்மாள் 60, புகார் அளித்துள்ளார்.
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு அரிசி மூடையுன் வந்தார்.
அப்போது மாரியம்மாள் கூறுகையில், தற்போதுள்ள வீட்டினை 2 ஆண்டுகள் ஒத்திக்கு வாங்கியுள்ள நிலையில் இன்னும் ஓராண்டு மீதம் உள்ளது. இந்நிலையில் சிலர் வீட்டை காலி செய்ய வேண்டும் என மிரட்டுகின்றனர்.
அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து சமைப்பதற்கு வைத்திருந்த அரிசியில் கல் மண் சாணம் போன்றவற்றை கொட்டியுள்ளனர். சமைக்க முடியாமல் கலெக்டரிடம் புகார் செய்வதற்கு அரிசியோடு வந்திருப்பதாகவும் தெரிவித்து கண்ணீர்விட்டார்.
போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மாரியம்மாள் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.