ADDED : பிப் 05, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே டூவீலர் மோதியதில் மூதாட்டி பலியானார். அவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
ராமநாதபுரம் பெருவயல் அருகே கலையனுார் பகுதியை சேர்ந்த காளிமுத்தன் மனைவி வள்ளி 65. இவர் நேற்று பெருவயல் விலக்கு பகுதியில் இருந்து தேவிபட்டினம் ரோட்டை கடக்க முயன்ற போது டூவீலர் மோதியதில் பலியானார். இவரது குடும்பத்தினர் இவரது கண்களை தானமாக வழங்கினர்.