/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குண்டாறு வரத்து கால்வாய் தடுப்பணையில் சீமைக்கருவேலம் வளர்ந்து புதர் மண்டியது
/
குண்டாறு வரத்து கால்வாய் தடுப்பணையில் சீமைக்கருவேலம் வளர்ந்து புதர் மண்டியது
குண்டாறு வரத்து கால்வாய் தடுப்பணையில் சீமைக்கருவேலம் வளர்ந்து புதர் மண்டியது
குண்டாறு வரத்து கால்வாய் தடுப்பணையில் சீமைக்கருவேலம் வளர்ந்து புதர் மண்டியது
ADDED : செப் 21, 2024 05:27 AM

மதுரை வைகை ஆற்றில் இருந்து பிரிந்து வரும் கிளை ஆறுதான் குண்டாறு. இதன் மூலம் வரும் தண்ணீர் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம கண்மாய்கள் நிரம்பி வரும் அளவுக்கு வரத்து கால்வாய் வசதியுள்ளது. இதில் வரும் தண்ணீரில் விவசாயம், குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஆற்றில் வரும்தண்ணீரை தேக்கி வைப்பதற்காக 1957ல் மிகப்பெரிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதில் 10 அடி உயரம் கொண்ட இரும்பு கதவுகளான 15 மதகுகள் உள்ளன. வினாடிக்கு 10 ஆயிரம்கன அடி தண்ணீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
இதன் மூலம் முதுகுளத்துார், சாயல்குடிக்கு தண்ணீர் பிரித்து விடப்படுகிறது. குண்டாறு வரத்து கால்வாய் கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் ஆங்காங்கே சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
விவசாயிகள் கூறியதாவது:
கமுதி பகுதியில் குண்டாற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதன் மூலம் பிரித்து அனுப்பப்படும் கிளை ஆறுகளான மலட்டாறு, ரெகுநாத காவிரி ஆறுகளும் உள்ளன.கமுதியை சுற்றியுள்ள 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், முதுகுளத்துார், கடலாடி தாலுகாவில் உள்ள 30 ஆயிரம் ஹெக்டேர் பாசன வசதி பெறும் கண்மாய் விவசாய நிலங்களும் இந்த தண்ணீர் மூலம் பயன்பட்டு வந்தன.
கடந்த பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால் கருவேல் மரங்கள் வளர்ந்து மணல் மேடாகி இருந்த இடம் தெரியாமல் அழிந்து வருகிறது. இதனால் ஏராளமான இடங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில விவசாயிகள் நிலத்தை விட்டு விடக்கூடாது என்பதற்காக போர்வெல், டிராக்டர் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர்.
பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைத்து விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். கமுதி பகுதியில் இவ்வளவு பாசன வசதி பெறும் ஆறுகள் இருந்தும் முறையாக துார்வாரப்படாததால் பயனில்லாத அளவுக்கு மாறி உள்ளது. இதையே நம்பி இருக்கும் கிளை ஆறுகளிலும் வரத்து கால்வாய் துார்வாரப்படாமல் புதர்மண்டி உள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை காலத்தின் போது குண்டாறு தடுப்பணையில் தண்ணீர் வந்த நேரத்தில்தடுப்பணை மதகுகளின்இரும்பு கதவு சேதமடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. தற்போது வரை இரும்பு கதவுகள் சீரமைக்கப்படாமல் உள்ளது.
தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் தேங்கி நிற்கும் மழைநீர் வீணாகும் அபாயம் உள்ளது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் வரத்து கால்வாயிலில் கருவேல் மரங்கள் அகற்றப்பட்டு துார்வாரப்பட வேண்டும் என்றனர்.