/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.27.37 லட்சம் மோசடி: ஒருவர் கைது
/
ராமநாதபுரத்தில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.27.37 லட்சம் மோசடி: ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.27.37 லட்சம் மோசடி: ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.27.37 லட்சம் மோசடி: ஒருவர் கைது
ADDED : டிச 28, 2024 01:19 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் குலுக்கல் சீட்டு நடத்தி ரூ.27 லட்சத்து 37 ஆயிரம் மோசடி செய்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கண்ணனை 52, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் பர்னிச்சர் கடை நடத்துபவர் கண்ணன். இவரது கடைக்கு திருப்பாலைக்குடியைச் சேர்ந்த முகமது இமாம் மனைவி ரகுமத்நிஷா பர்னிச்சர் வாங்க வந்துள்ளார். அவரிடம் கண்ணன்,''இங்கு குலுக்கல் சீட்டு நடத்தி வருகிறேன்.
இதில் மாதம் ரூ. 1250, ரூ.2000 என 25 மாதங்களுக்கு கட்ட வேண்டும். மாதம்தோறும் நடத்தப்படும் குலுக்கலில் பரிசு விழுந்தவர்கள் பணம் கட்ட தேவையில்லை. 25 மாத பணத்திற்கும் சேர்த்து தங்க நாணயம் அல்லது பர்னிச்சர் அல்லது ரொக்கமாக பணம் பெற்றுக்கொள்ளலாம்,'' என தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய ரகுமத் நிஷா குலுக்கல் சீட்டில் சேர்ந்து பணம் கட்டினார். மேலும் 50 வாடிக்கையாளர்களை குலுக்கல் சீட்டில் சேர்த்தால் 4 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என கண்ணன் கூறியதை நம்பி ரகுமத்நிஷா திருப்பாலைக்குடி பகுதி உறவினர்கள் உள்ளிட்ட 321 பேரை சேர்த்துள்ளார். பணம் கட்டியவர்களுக்கு சீட்டு விழுந்த பிறகும் கண்ணன் பணம் தரவில்லை.
இதுகுறித்து ரகுமத்நிஷா குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ரூ. 76 லட்சத்து 8 ஆயிரத்து 100 ல் ரூ. 48 லட்சத்து 70 ஆயிரத்து 500 ஐ திருப்பி கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.27 லட்சத்து 37 ஆயிரம் வரை கண்ணன் மோசடி செய்துள்ளார். கண்ணனை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., ரவீந்திரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.