/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது
/
மது போதையில் வாலிபர் கொலை: ஒருவர் கைது
ADDED : ஜன 22, 2025 02:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே சாத்தக்கோன்வலசை ஊராட்சி தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்பைச் சேர்ந்த நாகரத்தினம் மகன் குழந்தைவேலு 33.
இவரது வீடு அருகே வசிக்கும் சேகர் மகன் சரவணன் 34.
இருவரும் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வீடு அருகே மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கோழி வெட்டும் கத்தியால் குழந்தைவேலு மார்பில் சரவணன் குத்தினார்.
இதில் சம்பவயிடத்திலேயே குழந்தைவேலு பலியானார். சரவணனை உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.