ADDED : மார் 14, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : கமுதி அருகே அ.பள்ளபச்சேரியை சேர்ந்தவர் குமார் 45. மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தார். புகாரில் கமுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு ராமநாதபுரம் சிறையில் உள்ளார்.
இவர் மீது அபிராமத்தில் கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இதையடுத்து ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் குமாரை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமநாதபுரம் சிறையில் இருந்த குமார் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

