/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டேங்கர் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
/
டேங்கர் லாரி கவிழ்ந்து ஒருவர் பலி
ADDED : ஜன 13, 2025 01:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை சிப்காட் அருகே தார் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்ததில் அதில் வந்த ஆசிப் 27, பலியானார். டிரைவர் அம்ஜத் 29 ,காயமுற்றார்.
கேரளாவில் இருந்து தார் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ராமநாதபுரம் நோக்கி சென்றது. மானாமதுரை அருகே சிப்காட் மின்வாரிய அலுவலகம் அருகே நேற்றுகாலை பாலத்தின் தடுப்பு சுவரில் லாரி மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்தது. கேபின், டயர், டேங்கர் உள்ளிட்டவை துண்டாயின. இதில் லாரியில் வந்த கேரள மாநிலம் எர்ணாகுளம் ஆசிப் பலியானார். டிரைவர் அம்ஜத் காயமுற்றார். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.