ADDED : பிப் 08, 2024 09:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : -முதுகுளத்துார் அருகே புளியங்குடியைச் சேர்ந்த விவசாய தொழிலாளி லெட்சுமணன் 54. இவர் வீட்டின் வாசலில் உள்ள மின் விளக்கை சரி செய்யும் போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
முத்துகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் லெட்சுமணன் இறந்துவிட்டதாக கூறினர். முதுகுளத்துார் எஸ்.ஐ., சரவணன் விசாரிக்கிறார்.

