தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஓட்டுப்பதிவு இயந்திர பட்டன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதம்

 ஓட்டுப்பதிவு இயந்திர பட்டன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதம்

 ஓட்டுப்பதிவு இயந்திர பட்டன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதம்


ADDED : ஏப் 23, 2026 08:59 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2026 08:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சாத்தனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடி மையத்தில் சுயேச்சை வேட்பாளர் பட்டன் வேலை செய்யாததால் ஒரு மணி நேரம் தாமதமாக மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு மக்கள் ஓட்டளித்தனர்.

முதுகுளத்துார் தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உட்பட 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 414 ஓட்டுச்சாவடி மையங்களில் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதுகுளத்துார் அருகே சாத்தனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையம் 107 ல் சுயேச்சை வேட்பாளர் டார்ச் லைட் சின்னம் பட்டன் வேலை செய்யாதால் அதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

பின்பு அதிகாரிகளால் மாற்று ஓட்டுப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு முகவர்கள் முன்னிலை சரிபார்த்து ஒரு மணி நேரம் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது. மக்கள் காத்திருந்து ஓட்டளித்தனர். இதே போல் மேற்கு கொட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஓட்டுச்சாவடியில் இயந்திர கோளாறால் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us