ADDED : ஜன 19, 2025 04:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி எல்.ஐ.சி., அருகில் டூவீலர் மீது பால் வேன் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலியானார்.
பரமக்குடி பாரதி நகரை சேர்ந்தவர் சேவியர் எழிலன் 37. இவர் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு மதுரை- ராமேஸ்வரம் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். எல்.ஐ.சி., அருகில் பால் டேங்கர் வேன் எடை போடும் நிலையத்திலிருந்து பின்னோக்கி வந்துள்ளது.
அப்போது டூவீலர் மீது மோதியதில் படுகாயம் அடைந்த சேவியர் எழிலன் பலியானார். மனைவி செங்கோல் ஜெனிபர் சவரிமுத்து புகாரில் பால் வாகன டிரைவர் காரைக்குடி திருநாவுக்கரசிடம் 40, டவுன் போலீஸ் எஸ்.ஐ., வெங்கடேஷ் விசாரிக்கிறார்.

