ADDED : பிப் 04, 2025 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே காவனக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 45. கட்டுமான தொழிலாளியான இவர் ஜன.30ல் வேலை முடிந்து வீட்டிற்கு இரவில் திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை கொத்திடல் கலக்குடி விலக்கு அருகே நடந்து சென்றார்.
அப்போது டூவீலர் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
டூவீலர் ஓட்டிய ஆர்.எஸ்.மங்கலம் யாசர் அராபத் 30, மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல் கிஷாம் வழக்கு பதிந்தார்.