ADDED : செப் 10, 2026 07:22 PM
அ நிறம் | அளவு
உச்சிபுளி: கமுதி தேவர்நகரை சேர்ந்த ஜெயராமன் 55.
இவர் செப்.,7 ல் சொந்த வேலையாக உச்சிபுளி வந்தவர் ராமேஸ்வரம் ரோட்டை நடந்து கடக்க முயன்றார். அப்போது எதிர்பாரத விதமாக ஆட்டோ மோதி காயமடைந்தார். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் (செப்.,9) ஜெயராமன் இறந்தார். உச்சிபுளியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சபரி 33, மீது உச்சிபுளி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.---
