/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பகுதியில் ஒரு லி., பதநீர் ரூ.100க்கு விற்பனை இயற்கை பான பிரியர்கள் விருப்பம்

ADDED : மார் 24, 2025 05:58 AM
சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ள நிலையில் பிப்., மாத இறுதியில் இருந்து பதநீர் சீசன் துவங்கியது. தற்போது ஒரு லி., பதநீர் ரூ.100க்கு விற்கப்படுகிறது.
சாயல்குடி பகுதியில் உள்ள பனைமரக்காடுகள் நிறைந்த பகுதியில் பனை மரத் தொழில் மேற்கொண்டுள்ள பனைத் தொழிலாளர்களிடம் காலை நேரங்களில் பதநீர் குடிப்பதற்காக இயற்கை பானம் விரும்பும் மக்கள் செல்கின்றனர். பனை மரத் தொழிலாளிகள் கூறியதாவது:
சீசன் காலங்களில் பனை மரத்திலிருந்து பதநீர் இறக்கப்பட்டு பெரும்பாலும் அவை கருப்பட்டி காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பதநீர் குடிப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ள இயற்கை பான விருப்பமுள்ளவர்கள் நேரடியாக பனைமரக் காட்டிற்கு வந்து அங்கு பனை ஓலை பட்டையில் பதநீர் குடித்து செல்கின்றனர்.
பெரும்பாலானோர் ஒரு லி., பாட்டிலில் வாங்கி செல்கின்றனர். ஒரு லி., பதநீர் ரூ.100க்கு விற்பனை செய்கிறோம். பதநீரை அந்தந்த சீசன் காலங்களில் சாப்பிடுவது உடலுக்கு வலு சேர்க்கும். இதன் மகத்துவம் அறிந்தவர்கள் விரும்பி சுவைக்கின்றனர் என்றனர்.