ADDED : ஜூலை 19, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:விருதுநகர் மாவட்டம் அம்மன்பட்டியைச்சேர்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமார் 23. ஜூலை 15ல் கமுதி அருகே மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் கொலை செய்யப் பட்டார். போலீசார், கமுதி கண்ணார்பட்டி ரமேஷ் 27 என்பவரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
நல்லுக்குமாரும் நண்பரான சபரிராஜனும் கமுதி யூனியன் அலுவலகம் அருகே மது அருந்தி கொண்டிருந்தனர். அங்கு வந்த மணிவண்ணன், பிரித்விராஜ், ரமேஷ் ஆகியோர் நல்லுக்குமாரிடம் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டி மரக்குளத்திற்கு அழைத்துச் சென்று நல்லுக்குமாரை கொலை செய்தனர். பின்னர் தன்னை மட்டும் பாதிவழியில் இறக்கி விட்டுச் சென்றதாகவும் ரமேஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில் மணிவண்ணன், பிரித்விராஜ் ஆகியோரை தேடி வருகிறோம் என்றனர்.

