நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உச்சிப்புளி: ராமநாதபுரம் அருகே பெருங்குளத்தில் ராமேஸ்வரம் ரோட்டில் நடந்து சென்ற 38 வயது ஆண் ஒருவர் கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார். அவர் குறித்த விவரம் தெரியாததால் உடல் ராமநாதபுரம் அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
பெருங்குளம் வி.ஏ.ஓ., மணிகண்டன் புகாரில் ராமநாதபுரம் சேதுபதி நகர் கார் டிரைவர் முகமது சிக்கந்தர் 33, மீது வழக்குபதிந்து உச்சிபுளி போலீசார் விசாரிக்கின்றனர்.