ADDED : ஜூலை 16, 2025 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:முதுகுளத்துார்--கமுதி ரோடு சித்திரங்குடி விலக்கு ரோட்டருகே டூவீலர் மீது லாரி மோதியதில் புல்வாய்குளத்தை சேர்ந்த கருங்கன்ராஜ் சம்பவ இடத்தில் இறந்தார்.
முதுகுளத்துார் அருகே புல்வாய்குளத்தை சேர்ந்த கருங்கன்ராஜ் 55, டூவீலரில் முதுகுளத்தூர் சென்றுள்ளார். அப்போதுமுதுகுளத்துார்-கமுதி ரோடு சித்திரங்குடி விலக்கு ரோடு அருகே பரமக்குடியில் இருந்து கமுதி நோக்கி வந்த லாரி டூவீலர் மீது மோதியதில் கருங்கன்ராஜ் சம்பவ இடத்தில் பலியானார்.
பேரையூர் போலீசார் லாரி டிரைவர் மேலக்காவனுாரை சேர்ந்த சார்லஸ் 41, என்பவரை கைது செய்தனர்.

