/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் டிரைவரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
/
பஸ் டிரைவரை தாக்கியவருக்கு ஓராண்டு சிறை தண்டனை
ADDED : மார் 21, 2024 01:49 AM
கடலாடி: -ராமநாதபுரம் மாவட்டம் ஆப்பனுாரில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் தாமரைகண்ணன் என்பவருக்கு, ஓர் ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார்.
கடலாடி அருகே ஆப்பனுாரில் கடந்த 2019 செப்.,30ல் முதுகுளத்துாரில் இருந்து கடலாடி வழியாக சென்ற அரசு டவுன் பஸ்சை டிரைவர் தேவபிரபு 45, இயக்கினார்.
ஆப்பனுாரில் அப்பகுதியை சேர்ந்த தாமரைக்கண்ணன் 39, அரசு டவுன் பஸ்சை வழி மறித்து யாரேனும் பார்சல் கொடுத்துள்ளனரா என கேட்டுள்ளார். அதற்கு டிரைவர் தேவபிரபு, கண்டக்டர் சின்னச்சாமி ஆகியோர் யாரும் பார்சல் கொடுக்கவில்லை என்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த தாமரைக்கண்ணன் தேவபிரபை தாக்கினார். இதுகுறித்து கடலாடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையில் நேற்று கடலாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நீதிபதி விஸ்வநாத், குற்றவாளி தாமரைக்கண்ணனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும், ரூ.6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

