ADDED : ஜன 10, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் மிளகாய் விவசாயத்திற்கு ஊடுபயிராக வெங்காய விதைகள் நட்டு விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். ஒரு சில விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மிளகாய் விவசாயம் செய்கின்றனர். அதற்கு ஊடுபயிராக பல்வேறு கிராமங்களில் வெங்காய விதைகள் நட்டுள்ளனர்.
இதற்கு குறைந்த அளவு தண்ணீர் போதுமானதால் செடிகள் நன்கு வளர்ந்து வருகிறது. இதனால் மிளகாய் செடிகளுக்கு ஊடுபயிராக வெங்காய செடிகள் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

