/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் துவக்கம்
/
கடலாடி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் துவக்கம்
கடலாடி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் துவக்கம்
கடலாடி அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் துவக்கம்
ADDED : மே 17, 2025 12:49 AM
கடலாடி: கடலாடியில் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடக்கிறது.
கடலாடி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கடலாடி அரசு கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி.,கணினி அறிவியல், பி.பி.ஏ., என ஐந்து பிரிவுகள் உள்ளன. அரசின் சலுகைகளான மாணவர்களுக்கு தமிழ் புதல்வன், புதுமை பெண்கள் திட்டத்தில் மாதம் ரூ.1000, ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
வெளியூர் மாணவிகளுக்கு தங்கி படிப்பதற்கு இலவச அரசு விடுதியும், இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மேற்கண்ட பாடப்பிரிவுகளில் சேர விரும்பும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்கள் கல்லுாரியில் நேரடியாக வழங்கப்பட மாட்டாது.
தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளம் முகவரி: www.tngasa.in. www.tngasa.org இணையதளத்தில் மே 7 முதல் 27 வரை மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.