/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதத்தை தடுக்க வேண்டும்
/
வாகனங்களுக்கு ஆன்லைன் அபராதத்தை தடுக்க வேண்டும்
ADDED : டிச 10, 2024 05:04 AM
கம்யூ., வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி காந்தி சிலை முன்பு கம்யூ., கட்சிகள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்டத் தலைவர் ராதா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ராஜன் துவக்கி வைத்தார். நிர்வாகிகள் செல்வராஜ், ருக்குமாங்கதன் உட்பட பலர் பேசினர். அப்போது டூவீலர், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு போலீசார் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் வாகன ஓட்டிகளுக்கு தெரியாமலே வழக்கு பதிந்து அபராதம் விதிப்பதை தடுக்க வேண்டும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய உரிமைக்கு மாறாக ஜனநாயக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் நடத்தும் இயக்கங்களில் போலீசார் தலையிடும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.