/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆன்லைனில் மோசடி: ராமேஸ்வரம் கோயில் பெயரில் தீர்த்தம் விற்பனை
/
ஆன்லைனில் மோசடி: ராமேஸ்வரம் கோயில் பெயரில் தீர்த்தம் விற்பனை
ஆன்லைனில் மோசடி: ராமேஸ்வரம் கோயில் பெயரில் தீர்த்தம் விற்பனை
ஆன்லைனில் மோசடி: ராமேஸ்வரம் கோயில் பெயரில் தீர்த்தம் விற்பனை
ADDED : பிப் 17, 2024 02:15 AM
ராமேஸ்வரம்,:-பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனம் சார்பில் ராமேஸ்வரம் கோயில் பெயரில் புனித தீர்த்தம் விற்று மோசடியில் ஈடுபடுவதாக ஹிந்து முன்னணியினர் புகார் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இதில் 22வது தீர்த்தமான கோடி தீர்த்தத்தை கோயில் நிர்வாகம் உள் பிரகாரத்தில் உள்ள பிரசாத கடையில் அரை லிட்டர் பாட்டிலில் ரூ.20 க்கு விற்கிறது.
இந்த புனித தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்களை தனியாருக்கு கோயில் நிர்வாகம் விற்பதில்லை. கடைகளில் விற்க அனுமதியும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக கோயிலை சுற்றியுள்ள சில தனியார் கடைகளில் போலியாக கோடி தீர்த்தம் விற்கின்றனர்.
இந்நிலையில் பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் ராமேஸ்வரம் கோயில் புனித தீர்த்தம் என வெளியிட்டு 100 மி.லி., பாட்டில் ரூ.249க்கு விற்கின்றனர். இதனை பெரும்பாலும் வட மாநில பக்தர்கள் விரும்பி வாங்குவதாக கூறப்படுகிறது.
ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது :
புனிதம், மகத்துவம் வாய்ந்த கோடி தீர்த்தம் கோயிலை தவிர வேறு எங்கும் விற்பதில்லை. ஆனால் பணத்திற்காக சிலர் பக்தர்களை ஏமாற்றி விற்கின்றனர். ஒரு தனியார் நிறுவனம் ஆன்லைனில் போலியாக தீர்த்தம் விற்று பக்தர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கின்றனர்.
இந்த மோசடியில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றார்.